முஸ்தபா முஸ்தபா பாடல் புகழ் வினிதா இது… தற்போது எப்படி மாறிட்டாரு பாருங்க..

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் இளமை துள்ளளோடு வலம் வந்தவர்களில் நடிகர் வினித்தும் ஒருவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிகப்படங்களில் நடித்திருக்கும் இவர் சந்திரமுகி திரைப்படத்தில் சந்திரமுகியின் காதலனாக நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு ஆவாரம் பூ என்னும் படத்தில் சக்கரை என்னும் கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டர் வெகுவாகப் பேசப்பட்டது. கடந்த 1967 ஆம் ஆண்டு கேரளத்தின் கண்ணூரில் பிறந்தார். இவரது அப்பா கே.டி.ராதாகிருஷ்ணன் வழக்கறிஞர். அம்மா சாந்தகுமாரி மருத்துவராக உள்ளார். நடிகர் வினித்க்கு சின்ன வயதில் இருந்தே நடனக்கலையில் ஆர்வம் அதிகம். நாட்டியப் பேரொளி பத்மினி வினித்க்கு நெருங்கிய உறவினர். இதனால் சிறுவயதிலேயே முறைப்படி பரதம் கற்றும் அசத்தினார் வினித்.

தமிழில் 1992 இல் தான் ஆவாரம் பூ மூலம் அறிமுகம் ஆனார். ஆனால் அதற்கும் முன்பே 1984 ஆம் ஆண்டே இடனிலங்கள் என்னும் மலையாளப் படத்தில் நடித்திருந்தார். நடிப்பு மட்டும் இல்லாமல் பல படங்களிலும் நடன இயக்குனர் பணியும் செய்துள்ளார்.

நடிகர் வினித் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரிசில்லா மேனன் என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு அவந்தி என்ற பெண்குழந்தையும் உள்ளது இப்போது வினித்க்கு 53 வயதாகிறது. இன்னும் கூட வயது தெரியாமல் உடம்பை மெயிண்டைன் செய்கிறார் வினித். தற்போது அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில்வைரலாகி வருகின்றன புகைப்பட இணைப்பு கீழே…

pic1

pic2

pic3

You may have missed