உருவத்திலும் சரி அழகிலும் சரி அச்சுஅசலாக அக்காவை போல் இருக்கும் காஜல் அகர்வாலின் தங்கை…வியந்து போன ரசிகர்கள் …!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் பழனி என்ற படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதனை தொடர்நது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாக நடித்த படம் இந்தியன் 3.

அதன் பிறகு தன்னுடைய திருமண வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மேலும் இவரது தங்கை நிஷா அகர்வாலும் நடிகை ஆவார். இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் இஷ்டம் என்ற படத்தில் நடித்தார். மேலும் இவர் 2013 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவரின் பிறந்தநாளை ஒட்டி அக்கா தங்கை இருவரும் இணைந்து போட்டோஸ் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதில் யார் அக்கா யார் தங்கை என்று கூட தெரியவில்லை. இரட்டை பிறவிகள் போல் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் எடுத்த போட்டோஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் காஜல் அகர்வால் மறுபடியும் சினிமாவில் நடிக்க வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

pic1

pic2

pic3

pic4

pic5

pic6

pic7

You may have missed