சிவகார்த்திகேயனின் அமரனில் மாஸ்ஸாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார் சிம்பு…! தகவல்கள் வெளியானது..!

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்திருக்கும் அமரன். இப்படம் வருகிற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி அன்று வெளிவருகிறது. இந்த படம் ராணுவ வீரர் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மக்களுக்கு பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில் அமரணாக சிவகார்த்தியன் நடிக்கிறார். அமரனின் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸ் ஆக நடிக்கிறார் சாய்பல்லவி. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்க்கீஸ் இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள காதல் இந்த படத்தில் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேஜர் அமரன் மற்றும் இந்து காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். தன்னுடைய நாட்டின் மேல் உள்ள பற்றினால் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணத்தை பெருமையோடு ஏற்று கொண்ட ஒரு சிங்க பெண் தான் இந்து இந்த கதாபாத்திரத்தில் சாய் பல்லவி அருமையாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என்கிற தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் நடிகர் கமலுடன் இணைந்து தக் லைப் படத்தில் சிம்பு நடித்துள்ளதால் கமல் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு கலந்து கொள்வார் எனவும் உத்தேசமாக தகவல்கள் வெளிவந்துள்ளன.