ட்ரெண்டிங் உடையில் அசத்தும் நடிகை பிரியங்கா மோகன்.. வைரலாகும் அசத்தலான புகைப்படங்கள்..!
தமிழ் சினிமாவில் டாக்டர் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ப்ரியங்கா மோகன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. மேலும் இவர் டாக்டர் படத்தினை தொடர்ந்து டான் படத்தில்நடித்தார். இந்த படமும் ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாக்கு ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி கொஞ்ச நாளிலே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் தன்னுடைய பெயரை அனைவரும் சொல்லும் படி வெற்றி படங்களை குவித்தார்.
மேலும் இவர் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரதர்ஸ் படத்தில் நடித்துள்ளார். மேலும் தனுஷ் இயக்கி வரும் என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அதற்க்கான போஸ்டர்கள் அண்மையில் வெளியானது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவர் ட்ரெண்டிங் உடையில் சும்மா அசத்தலான போஸ்கலில் போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
pic1
pic2
pic3
pic4
pic5