பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டை பெற்ற நடிகை ராசி கன்னா.. மகிழ்ச்சியில் நடிகை..!
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் நடிகை ராசி கன்னா. இவர் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2022 ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து தி சபர்மதி ரிப்போர்ட் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, ராசி கன்னா உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்த படம் கடந்த நவம்பர் 15 திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் பல அரசியல் விமர்சனங்களை பெற்று வந்தது . அனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி அவருடைய எக்ஸ் தள பக்கத்தில் வரலாற்றில் மிகவும் முக்கியமான படம். உண்மையை வெளிக்கொண்டு வந்த படம் என்று பார்த்திருந்தார்.
தன்னுடைய 34 வயது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை ராசி கன்னா பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியதை நினைவு கூர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையில் இது போன்ற ஒரு ஆதரவை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருந்தார். இது போன்று பல அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள் என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.