காதலர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த எவர்க்ரீன் ஜோடி.. 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த போட்டோஸ் வைரல்..!
![](https://sodukki.com/wp-content/uploads/2024/10/actress-shalini-actor-mathavan-meet-photos-viral-1.jpg)
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ஷாலினி. இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார். இவர் நடித்த படம் அணைத்தும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. மேலும் இவர் கதாநாயகியாக காதலுக்கு மரியாதை படத்தில் தான் அறிமுகம் ஆனார். விஜயுடன் ஜோடி சேர்ந்தது நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து இவர் அடுத்த படமும் விஜயுடன் இணைந்து கண்ணெதிரே தோன்றினால் என்ற படத்தில் நடித்தார் அதுவும் சூப்பர் ஹிட் அடித்தது.
![](https://sodukki.com/wp-content/uploads/2024/10/actress-shalini-actor-mathavan-meet-photos-viral-2.jpg)
அதன் பிறகு நடிகர் அஜித் உடன் இணைந்து அமர்க்களம் படத்தில் நடித்தார். இந்த படமும் வெற்றி கனியை எட்டியது. இந்த படத்தில் நடித்த சமயம் இருவரும் காதலித்து வந்தனர். பின்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு ஷாலினி கமிட் ஆன படத்தில் மட்டுமே நடித்தார். நடிகர் மாதவன் உடன் இணைந்து அலைபாயுதே படத்தில் நடித்தார். இந்த படத்தின் ஒவ்வொரு சீன் மற்றும் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் கலக்கியது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் இந்த படம் தான் காதலர்களுக்கு முன்னோடியாக இன்றய காலகட்டத்திலும் திகழ்ந்து வருகிறது.
![](https://sodukki.com/wp-content/uploads/2024/10/actress-shalini-actor-mathavan-meet-photos-viral-3.jpg)
மேலும் 90 ஸ் களின் மனதில் நீங்காத படங்களில் இதுவும் ஓன்று. மேலும் பிரசாந்த் உடன் இணைந்து பிரியாத வரம் வேண்டும் படத்திலும் நடித்தார். அலைபாயுதே படம் நடித்து 24 வருடம் ஆகிறது. 24 வருடத்திற்கு பிறகு நடிகர் மாதவனும் நடிகை ஷாலினியும் மீண்டும் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் செல்பீ எடுத்துள்ளனர். இந்த போட்டோஸ் ஷாலினி தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.