போட்டோவில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா..? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய முன்னணி நடிகரின் மனைவி இவர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித் குமார். இவரது மனைவி தான் நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ஷாலினி. இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திமாக பல படங்கள் நடித்துள்ளார். மேலும் இவர் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார். இவர் நடித்த படம் அணைத்தும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

மேலும் இவர் கதாநாயகியாக காதலுக்கு மரியாதை படத்தில் தான் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினால் என்ற படத்தில் நடித்தார்.அதன் பிறகு நடிகர் அஜித் உடன் இணைந்து அமர்க்களம் படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்த சமயம் இருவரும் காதலித்து வந்தனர். பின்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு ஷாலினி கமிட் ஆன படத்தில் மட்டுமே நடித்தார். நடிகர் மாதவன் உடன் இணைந்து அலைபாயுதே படத்தில் நடித்தார்.

தன்னுடைய திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் ஷாலினி சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விட்டார். ஆனால் அவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக தான் இருந்து வருகிறார். தற்போது அவரின் சிறு வயது போட்டோஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாலினியை இது என வியப்பில் ஆழ்ந்து உள்ளனர். மேலும் போட்டோஸ்க்களை ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

pic5

pic6

You may have missed