முகுந்த் ஆக வாழ்ந்த சிவகார்த்திகேயன்.. அமரன் படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை கட்டி தழுவி வாழ்த்து சொன்ன சீமான்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளிவந்த படம் தான் அமரன். இந்த படம் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்திருக்கும் படமாகும். இந்த படம் ராணுவ வீரர் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மக்களுக்கு பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது.இந்த படத்தில் இந்து ரெபேக்கா வர்க்கீஸ் ஆக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்க்கீஸ் இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள காதல் மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜன் தன்னுடைய நாட்டின் மேல் உள்ள பற்றினால் வீர மரணம் அடைந்த வரலாறு மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணத்தை பெருமையோடு ஏற்று கொண்ட ஒரு சிங்க பெண் தான் இந்து. மேலும் மேஜர் அமரன் வீர மரணம் அடைந்த பிறகு அசோகா சக்கரா விருது வாங்கும் போது இருந்த நிமிர்வு என இவர்களின் வாழ்க்கை வரலாறை வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் திரைக்கு வந்த நாள் முதல் இன்று வரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒரு படமாக தான் அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தினை பார்த்து பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள். அந்த வகையில் சீமான் இந்த படத்தினை பார்த்து தம்பி சிவகார்த்திகேயன் முகுந்தாகவே இந்த படத்தில் வாழ்ந்து விட்டார் எனவும் மேலும் சாய் பல்லவி சின்ன சின்ன கதாபாத்திரத்திலேயே அற்புதமாக நடிப்பவர் அவரும் இந்த படத்தில் இந்து ரெபேக்கா வர்க்கீஸ் ஆக கச்சிதமாக நடித்துள்ளார் எனவும் கூறி உள்ளார். மேலும் சிவகார்த்திகேயனை கட்டி தழுவி வலது கூறினார். மேலும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் வாழ்த்து கூறினார். மேலும் கமலுக்கும் தொலைபேசியில் வாழ்த்து கூறினாராம்.

pic1

pic2

pic3

You may have missed