எப்படி இருந்த நடிகை மோகினி இப்படி ஆகிட்டாரு பாருங்க… ஹிட் படங்களின் நாயகி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா..?
தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை ஹீரோக்கள் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கின்றனர். ரஜினி, கமல் எல்லாம் 40 வருடங்கள் கடந்தும் இன்னும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். ஹீரோயின்கள் அப்படி இல்லை. திருமணத்தோடு அவர்களின் மார்க்கெட்டும் விழுந்துவிடுகிறது.
அந்த வகையில் இப்போது சினேகா மட்டும் திருமணத்துக்குப் பிறகும் சில படங்களில் தலைகாட்டுகிறார். அந்தவகையில் ஒருகாலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த மோகினியின் சமீபத்திய படங்கள் வெளியாகியுள்ளது. ஈரமான் ரோஜாவே திரைப்படம் மூலம் அறிமுகமான மோகினிக்கு அந்தப்படமே ஹிட் கொடுத்தது. தொடர்ந்து கேப்டன் விஜயகாந்துடன் தாய்மொழி, தாயகம் படங்களிலும் சீயான் விக்ரமுடன் புதியமன்னர்கள் உள்பட பல படங்களில் நடித்திருந்தார்.
நடிகை மோகினி தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கிலும் நடித்தார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சன் டிவி சீரியலில் தலைகாட்டினார். 1999ல் பாரத் என்பவரை கல்யாணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன மோகினிக்கு, இப்போது இரண்டு மகன்கள் உள்ளது. இந்துமதத்தில் இருந்து கிறிஸ்தவத்துக்கு மாறி இருக்கும் மோகினி இப்போது மதப்பிரச்சாரகராகவும் உள்ளார். அவரின் சமீபத்திய குடும்பப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
pic1
pic2
pic3