இன்றைய தலைமுறை மறந்து போன கலாச்சாரம்… பிறந்த குழந்தையை எடுத்து வந்து பாட்டி செய்ததை பாருங்க..!

வீட்டில் வயதான தாத்தா, பாட்டி இருப்பது ரொம்பவும் நல்லவிசயம். அதன் மூலம் தான் அடுத்த தலைமுறைக்கான வாழ்க்கைப்பாடம் கிடைக்கும். ஆனால் பல வீடுகளில் இன்று முதியோர்கள் இல்லை. வேலை விசயமாக பெற்றோர் வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே வளர்கிறார்கள். இதனால் விடுமுறைக்கு மட்டுமே தாத்தா, பாட்டியை பார்த்துக்கொள்ளும் சூழல் உள்ளது.

அதேநேரம் வீட்டில் இருக்கும் பாட்டி, தாத்தாக்கள் தான் நம் சந்ததிகளுக்கு கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்கின்றனர். இங்கேயும் அப்படித்தான் ஒரு பாட்டி, அரிசியை புடைக்கும் சொலவில் குழந்தையை வைத்து வானத்தை நோக்கி அதைக் காட்டுகிறார். தொடர்ந்து, அப்படியே மூன்று, நான்கு முறை காட்டுகிறார். இது எதற்காக பாட்டி இப்படி செய்கிறார் என்றே தெரியாமல் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்கின்றனர். இதன் அர்த்தம் என்னவென்றால், ‘பிறந்த குழந்தைக்கு 30 நாள் கடந்து, சூரியன் காட்டும் சடங்கு என இதைச் சொல்வார்கள். இந்த உலகில் பிறவி கொடுத்து வெளியில் வர இருக்கும் இந்த குழந்தையை சூரியனுக்குக் காட்டி, நன்றி சொல்வது தான் இந்த பாட்டி செய்யும் சடங்கின் அர்த்தம்.

இதேபோல் முதல் பெளர்ணமில் நிலா காட்டும் சடங்கும் செய்வார்களாம். ஆனால் இதேபோல் அடுத்த தலைமுறைக்கு தகவல்களைக் கடத்தும் பெரியவர்கள் பலரது வீட்டிலும் இல்லை. இந்த பாட்டி ஒரு தகவல் பொக்கிஷம் தான் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may have missed