தளபதியின் படத்தில் ஒரு வருடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிக் பாஸ் மாயா…! வெளியான புகைப்படங்கள்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் தான் மாயா. இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்றன. அந்த வகையில் இவர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் தான் லியோ. இந்த படத்திலும் இவர் நடித்துள்ளார்.

மேலும் விக்ரம் படத்திலும் நடித்துள்ளார். தளபதியின் விஜய் படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானது. இந்நிலையில் மாயா தன்னுடைய இணையதள பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதாவது அவர் லியோ படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். மேலும் இந்த படத்தின் ஒரு வருட கொண்டாடத்திற்கான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதனை பற்றியும் நெகிழ்ச்சியடைந்து தன்னுடைய பதிவை போட்டுள்ளார்.

அதாவது அண்ணன் லோகேஷ் கனகராஜ் உடன் பணியாற்றியது மிகவும் பெருமையாக இருப்பதாகவும். இந்த வாய்ப்பினை தந்த அவருக்கு நன்றி எனவும் கூறியுள்ளார். மேலும் ஒரு வரும் பணியாற்றிய எனக்கு தளபதியுடன் ஏற்பட்ட அனுபவம் மற்றும் அவருடன் உரையாடிய உரையாடல்கள் அனைத்தும் பயனுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் சஞ்சய் தத் என் வாழ்க்கையில் அறிமுகம் செய்ததற்கு நன்றி எனவும் கூறி தன்னுடைய பதிவினை ஷேர் செய்துள்ளார்.