தன் துணையின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கும் பறவை.. பலரின் மனதை உருக்க வைத்த காட்சி..!

பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். காரணம் பறவைகள் ஒன்று சேர்ந்து பறப்பதும், கீச்..கீச் என குரல் எழுப்புவதும் பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.

அதேநேரம் நாம் கண்முன்னால் பார்க்கும் பறவைகள் கொஞ்சம் தான். இந்த உலகில் லட்சக்கணக்கான உயிரினங்கள் இருக்கிறது. அதிலும் காகா, குருவி, கொக்கு, புறா, கழுகு, கோழி, ஆந்தை, பருந்து என குறைவானவற்றையே நாம் அடிக்கடி பார்க்கிறோம். இயற்கை பல அதிசயங்களை தன்னகத்தே கொண்டது. அந்தவகையில், இப்போது ஒரு பறவையின் வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. மனிதர்களை விட பறவைகளின் மனம் மிகவும் மென்மையானது. அந்தவகையில் ஆஸ்திரேலியாவில் வாழும் ‘காலா’ என்னும் பறவை, தன் வாழ்க்கைத் துணையை இழக்கிறது.

காலா பறவையின் ஜோடி பறவை இறந்து கிடக்கிறது. இதனை அதன் இணை பறவையால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதன் அருகிலேயே மெதுவாக நடந்து வருகிறது. அதை எழுப்ப முயற்சிக்கிறது. கீச்..கீச் என குரல் எழுப்புகிறது. கடைசியில் இறந்து போன தன் துணையை விட்டு மிகுந்த சோகத்தோடு பிரிந்து செல்கிறது. இதை வனத்துறை அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ளார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

You may have missed