உங்கள் பிறவிக் குணம் எது தெரியுமா.. பிறந்த நேரத்தை வைத்து கணித்து விடலாம்..

என்னதான் படித்திருந்தாலும் சில நேரம் நாம் பண்பை மீறி நடந்துகொள்வோம். அதற்கெல்லாம் காரணம் நம் பிறவிக்குணம்தான். பிறவியிலேயே சில குணங்களை கொண்டு இருப்பதால் தான் சில கணக்குகள் ஜெயிக்கவும், பொய்க்கவும் செய்கிறது. சரி உங்கள் பிறவிக்குணத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று குணங்கள் இருக்கும். சாத்விகம், தாமஸ்ம், இராட்சச குணம். காலையில் சூரியன் உதிக்கும்போது சூரியன் முன்னால் கண்ணை மூடி பார்த்தால் வெண்திரை தெரியும். மதிய நேரத்தில் சூரியன் சிவப்புதிரை போல் இருக்கும். மாலையில் கருப்புதிரைபோல் இருக்கும். வெள்ளை, கருப்பு, சிவப்பு இதுவும் மூன்று குணங்களை குறிக்கும்.

கருப்பு தான் இராட்சச குணம். கெட்ட எண்ணங்களை உடைய குணம் இது. பொறாமை, சூழ்ச்சி, திருட்டுத்தனம் போன்ற குணம் இவர்களுக்கு இருக்கும்.

வெள்ளை..அமைதியான சாத்வீக குணத்தைக் குறிக்கிறது. இவர்கள் அமைதியைக் கடைபிடித்து நல்லவர்களாக வாழ்பவர்கள்.

சிகப்பு..இவர்கள் வேலைசெய்வதிலும் பொறுமையாகவும், சோம்பேறித்தனமாகவும் இருக்கும் தாமஸ குணம் உடையவர்கள் ஆவார்கள்.

பொதுவாகவே சூரியனை பார்க்கும்போது நமக்கு புலப்படுவதைப்போலவே காலையில் பிறந்தவர்கள் சாத்வீக குணமும், மதியம் பிறந்தவர்கள் தாமஸ குணமும், இரவு நேரத்தில் பிறந்தவர்கள் இராட்சஸ குணமும் உடையவர்கள். இவை நம்மையும் மீறி நம்முல் ஆதிக்கம் செலுத்துபவையாகும். ஆமா இதில் நீங்கள் எந்த நேரத்தில் பிறந்தவர் என்பதைவைத்து உங்கள் குணத்தை பார்த்துக்கொள்ளுங்கள்..

You may have missed