அட என்ன ஒரு அதிசயம் பாருங்க.. இளம்பெண்ணிடம் செம க்யூட்டாக பேசும் அதிசய காகம்..

பள்ளிக்கூடத்தில் 90ஸ் கிட்ஸ்கள் காலம் தொட்டே ஒரு கதை சொல்லப்படும். அது படக்கதையாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது. ஒரு காகத்தின் புத்திசாலித்தனத்தைக் காட்ட அந்த கதை வரும். அதாவது ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். காகத்துக்கு குடிப்பதற்கு அது எட்டாது. உடனே அக்கம், பக்கத்தில் இருக்கும் பொடி, பொடி கல்லாக தூக்கிவந்து பானையில் போடும். இதனால் தண்ணீர் மேலே வரும். அதன்பின்னர் காகம் தண்ணீரைக் குடிக்கும். இந்தக்கதை பள்ளிக்காலத்தில் செம பேமஸ்.

அதேபோல் இப்போது ஒரு காகம் செம புத்திசாலித்தனத்துடன் நடக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி காகம் என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். இங்கே ஒரு அடர் காகம் ஒன்றுக்கு தினமும் ஒரு இளம்பெண் உணவு அளித்து வந்தார்.

அந்த காகம் அவரிடம் அன்பாக பேசவும் செய்யும். அந்த இளம்பெண் கேட்கும் கேள்விக்கெல்லாம் காகம் செம க்யூட்டாக பதில் சொல்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

You may have missed