சும்மா ஒன்னும் இல்ல சி.ஆர்.பி.எப் வீரர்களின் வேலை… தினம் கடுமையை சந்தித்து நம்மை காக்கும் களவீரர்கள்..!

உண்மையில் நாம் தினசரி நம்மூர் காவலர்களைப் பார்க்கிறோம். ராணுவத்தில் இருந்து ஓய்வுக்கு பின்னர் வங்கிப் பணிக்கோ, வேறு ஏதோ பணிக்கோ வந்து விடும் வீரர்களைத்தான் நமக்குத் தெரியும். ஆனால் அன்றாடம் சி,ஆர்.பி.எப் விரர் எத்தனை கடும் போராட்டங்களை எதிர்கொள்கிறார் என்று தெரியுமா?

ஒரு சி.ஆர்.பி.எப் வீரரை தேர்வு செய்யும் முன்னர் உடல் தகுதித்தேர்வு வைப்பார்கள். முதலில் அவர்கள் 5 கிலோ மீட்டர் தூரத்தை 24 நிமிடத்துக்குள் ஓடிக் கடக்க வேண்டும். அதுவும் தார்ச்சாலையில். இது சாதாரணமானதே அல்ல. கால்மூட்டுக்கள் இரண்டும் கடுமையான இறக்கத்தினால் வலி பின்னி பிடல் எடுத்து விடும். இதில் தேர்ச்சி பெற்ற பின்னர் தான் அவர் துணை ராணுவ வீரராகத் தேர்வு செய்யப்படுவார். தொடர்ந்து ஆன்லைன் தேர்விலும் வாகை சூட வேண்டும்.

தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை முடிந்து, அவர் இந்திய தேசத்துக்காக உயிரையும் விடக்கூடிய அளவுக்கு நாட்டுப்பற்றாளராக மாற்றக் கூடிய பயிற்சி உடையவர் ஆவார். அதன் பின்னர் சம அளவு எடையுள்ள ஒரு மனிதரைத் தூக்கிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் நிற்காமல் ஓடவும் பயிற்சி அளிப்பார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? போரின் போது சகவீரர் காயம்பட்டோ, அல்லது எதிராளிகளால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியோ கிடந்தால் அவரைத்தூக்கிக் கொண்டு ஓட வேண்டும் அல்லவா? அதற்கான ஏற்பாடு தான் அது!

பசி, தூக்கம், தண்ணீர் தாகம் அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும். வெறும் அரை லிட்டர் தண்ணீருடன், 15 கிலோ மீட்டர் பயணிக்கச் செய்யும் டெஸ்ட் எல்லாம் உண்டு. இவை ஒன்றும் பிக்பாஸ் டாஸ்க் போல விரும்பாவிட்டால் செய்யாமல் இருக்க முடியாது. இத்தனை வலிகளையும் கடந்து தான் ஒரு சி.ஆர்.பி.எப் வீரர் உருவாகிறார். அந்த வலியை வெகுமக்களாகிய நாமும் உணர வேண்டிய நேரம் இது.

You may have missed