வகுப்பறையில் தூங்கி-விழும் குட்டி தேவதை… லட்சம் பேரை ரசிக்க வைத்த வீடியோ… குழந்தை என்ன ஒரு க்யூட் பாருங்க…!

கோபம், சிரிப்பு, வருத்தம் என எந்த ரியாக்‌ஷனைக் காட்டினாலும் அழகாகத் தெரிவது குழந்தைகள் மட்டும் தான் அதனால்தான் குழந்தைகள் என்றாலே நமக்கு ரசனைக்குரியவர்களாக இருக்கின்றார்கள். ஒரு கூடை நிறையப் பூக்கள் பூத்தாலும் ஒரு குழந்தையின் புன்னகைக்கு ஈடு ஆகாது என்று சொல்வதும் அதனால் தான்!

இங்கேயும் அப்படித்தான்…ப்ளே ஸ்கூலில் படிக்கும் குட்டிக் குழந்தை ஒன்று சக மாணவ, மாணவிகளோடு வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்கிறது. திடீரென தூக்கம் வர அந்த குழந்தை அமர்ந்த நிலையிலேயே சொக்கிப் போகிறது.

ஒருகட்டத்தில் அது உட்கார்ந்திருந்த இடத்திலேயே தூக்க மயக்கத்தில் சரிந்துவிழ, படக்கென முழிப்பு வந்து செம க்யூட்டாக சிரிக்கிறது. அந்த குட்டி தேவதை தூக்கத்தில் மயங்கி விழுவதைப் பார்த்து சக குழந்தைகள் சிரிக்க, அந்த குட்டி தேவதையின் முகத்தை வெட்கத்தைப் பார்க்கணுமே…இதோ நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்.

You may have missed