ரஜினியின் நடிப்பில் அடுத்த படத்தை உறுதி செய்தார் இயக்குனர் நெல்சன்.. ஜெயிலர் 2 குறித்து வெளியான தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்க்குனராக வலம் வருபவர் இயக்குனர் நெல்சன் திலிப்குமார். இவர் தற்போது நடிகர் கவினை வைத்து இயக்கி உள்ள படம் தான் “ப்ளடி பெக்கர்”.இந்த படம் நாளை வெளிவருகிறது. இந்த படத்தில் கவின் யாசகராக நடித்துள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. மேலும் இந்த படத்தில் கவினின் தோற்றமும் வித்தியாசமாக இருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் ஜெயிலர். இந்த படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன் லால் போன்ற சில பிரபலங்கள் நடித்திருந்தன. இந்நிலையில் ஜெயிலர் பாகம் 2 வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அதற்கான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில் நடிகர் கவினின் “ப்ளடி பெக்கர்” படத்தின் ப்ரோமோஷனில் பேசிய நெல்சன் கூலி படம் முடிந்த பிறகு நடிகர் விஜய் வைத்து ஒரு படம் தயாரிக்க இருப்பதாக கூறினார். மேலும் இதற்க்கு அடுத்ததாக ஜெயிலர் 2 படம் எடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பற்றி நெல்சன் எதுவும் கூறவில்லை. இருந்தபோதிலும் உத்தேசமான முறையில் தகவல்கள் வெளிவர உள்ளன.