உறவுகளில் விரிசல் ஏற்படுத்தும் 5 பொருட்கள்… யாரும் யாருக்கும் கொடுக்காதீர்கள்…
இந்து மதத்தில் தானம் கொடுப்பது ஒரு முக்கிய பங்காக இருந்து வருகிறது. அதிலும் முக்கியமாக சில பொருட்கள் தானமாக கொடுக்க கூடாது என்று சாஸ்திரங்களும் இருக்கின்றன. மறந்தும் கூட இந்த பொருட்கள் எல்லாம் தானம் செய்ய கூடாதாம். நாம் தானம் செய்யாவிட்டாலும் திருமணம் பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது பரிசுகள் கொடுக்கவேண்டி இருக்கும் அப்பொழுது இந்த மாதிரி பரிசுகளை கொடுக்காமல் தவிர்ப்பது நல்லதாம்.
என்ன என்ன பொருட்களை அடுத்தவர்க்கு கொடுப்பதை தவிர்க்கவேண்டும் என்று பார்ப்போம்.
அதாவது வாஸ்து சாஸ்திரப்படி மீன் தொட்டி போன்ற நீர் தொடர்பான பொருட்கள் அலங்கார பொருட்கள் யாருக்கும் கொடுக்கவும் கூடாதாம் யாரிடம் இருந்து பெற்று கொள்ளவும் கூடாதாம்.
மேலும் கத்தி போன்று கூர்மையாக இருக்கும் பொருட்கள் கண்ணாடி போன்ற பொருட்களும் கொடுக்க மற்றும் வாங்க கூடாதாம் அது கெட்ட சகுனத்தை குறிக்கும் பொருட்கள் என சாஸ்திரம் கூறுகிறது.
மேலும் கருப்பு நிற பொருட்கள் சிகப்பு நிற புத்தகங்களை கொடுக்க கூடாதாம் கருப்பு நிறம் மரணத்துடன் தொடர்புடையது எனவும் மேலும் இந்த நிறங்களில் பரிசு கொடுத்தால் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படும் எனவும் சாஸ்திரம் கூறுகிறது.
மேலும் நண்பர்கள் உறவினர்களுக்கு கடிகாரத்தை பரிசாக கொடுக்க கூடாதாம். நீண்ட நாள் உறவு நீடிக்க வேண்டும் என்று நினைக்கிற எந்த உறவுக்கும் கடிகாரம் பரிசாக குடுக்க கூடாதாம். உறவில் விரிசல் ஏற்படுமாம்.
மேலும் பர்ஸ், காலனி போன்றவற்றை பரிசாக கொடுத்தால் அவர்கள் உங்களை விட்டு போக நேரிடும் எனவே இதனை பரிசாக கொடுக்காதீர்கள் என சாஸ்திரம் கூறுகிறது.