காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதிலும் இப்படியொரு ஆபத்தா.. பலருக்கும் தெரியாத பயனுள்ள பதிவு..!
காதில் அழுக்கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கென்று கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதைவாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில்விடுபவர்களும் இருக்கிறார்கள். ஊக்கு, கேர்பின் என இதன் பட்டியல் நீளம். ஆனால் காதில் உள்ள அழுக்கை எடுப்பதிலும் சில நுபங்கள் இருக்கிறது.முறையாக நீக்காவிட்டால் அதுவே ஆபத்தாகிவிடும்.
கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்டிராலால் தான் காதில் அழுக்கு உருவாகிறது. நாம் அழுக்கு என அகற்றிவிடும் இந்த பொருள்கள் தான் மெழுகு போன்று நம் காதை பாதுகாக்கும் பாதுகாவலன். பொதுவாக அதிக சத்ததில் பாடலைக் கேட்பது காதை ரொம்பவே பாதிக்கும். அதிக சப்தம், பாக்டீரியா போன்றவற்றிடம் இருந்தும் இந்த மெழுகு போன்ற பொருள் காதைக் காப்பாற்றும் தடுப்பு அரணாக இருக்கும். அடிக்கடி காதில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்துகொண்டே இருப்பது செவித்திறனை பாதிக்கச் செய்வதோடு, நோய் தொற்றுக்கும் வழிவகுக்கும்.
தூசு போன்றவற்றில் இருந்தும் காதில் இருக்கும் மெழுகுப் படலம் பாதுகாக்கிறது. அதேபோல் காட்டன் பட்ஸ்ம் கூட ஆபத்தானதுதான். நாம் பட்ஸ் வழியே காதில் கொடுக்கும் அழுத்தம் நோய் தொற்றை உருவாக்கும்.
சரி இதற்கு என்னதான் தீர்வு? கடதில் இருக்கும் மெழுகு படலம் அதிகளவில் சேர்ந்து காதின் மேல்புறத்தில் வரும்போது மட்டுமே காதை சுத்தம் செய்யவேண்டும். என்ன? இனிமேல் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருப்பீர்கள் தானே?