வீட்டில் அதிகமான பல்லி, கரப்பான், கொசு, ஈ தொல்லையா..? கூண்டோடு ஒழிக்க இதை செஞ்சு பயன்படுத்துங்க..!

சிலரது வீடுகளில் கரப்பான் பூச்சி, எலி, பல்லி என தொந்தரவு இருக்கும். அவர்கள் அதனால் தாங்க முடியாத வேதனையை அனுபவிப்பார்கள். ஆனால் அதையெல்லாம் சின்ன, சின்ன சூட்சமங்களை பயன்படுத்தியே போக்க முடியும்.

கரப்பான் பூச்சி தொல்லையை போக்க பிரியாணி இலையை(ரம்பை இலை) பொடி செய்து கரப்பான் பூச்சி உங்கள் வீட்டில் அடிக்கடி வரும் இடத்தில் போட்டால் அந்த வாசனையில் கரப்பான் வராது. அதேபோல் கரப்பான் பூச்சி வரும் இடத்தில் கிராம்பை வைத்தாலும் வராது. இதேபோல் மிளகுத்தூள், வெங்காய பேஸ்ட், பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை கொஞ்சம் தண்ணீரில் கலந்து தெளித்தாலும் கரப்பான் தொல்லை இருக்காது.

எலி..

மான்ஸ்டர் என எஸ்.ஜே.சூர்யா நடித்த படம் எலியால் அவர் படும் துயரைச் சொல்லும். எலி பிரச்னையை போக்க புதினாவை கசக்கிப் போட்டால் போதும். இதேபோல் எண்ணையை பஞ்சில் நனைத்து எலி வரும் இடத்தில் வைத்தால் அவை வராது.

பல்லி..ஈ..கொசுவை விரட்ட

வீட்டு மூலைகளில் முட்டை ஓட்டை வைத்தால் அந்த நாற்றத்தில் பல்லி வராது. இதேபோல் வீட்டு ஜன்னல்களில் துளசி செடியை வைத்தால் ஈ வராது. ஈக்கு துளசி வாசனைப் பிடிக்காது. இதேபோல் காய்ந்த வேப்பிலையை வைத்து தீமூட்டினால் அந்த புகைமூட்டத்தில் கொசுக்கள் செத்துவிடும். இதேபோல் மெத்தையில் வெங்காய சாறு தெளித்தால் மூட்டை பூச்சி செத்துப் போகும்.

You may have missed