உங்கள் வெள்ளை முடியை கருப்பாக்க வேண்டுமா.. வீட்டிலேயே இருக்கு சூப்பர் மருத்துவம்..!

நரைமுடி அனைவருக்கும் இருக்கும் பிரச்னை. வயதானால் அனைவருக்கும் நரைமுடி வரும். சிலருக்கு இளவயதிலேயே சில சத்துக்குறைவுகளின் காரணமாக நரைமுடி வந்துவிடுகிறது. வெள்ளைமுடியை ஆயுசு முழுவதும் கருப்பாக இருக்க செய்ய எளிமையான ஒருவீட்டுக் குறிப்பு இருக்கிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். நாம் தலைக்கு குளிப்பதற்கு முன்னர் இந்த ஆயிலை அப்ளே செய்தால் நரைமுடியும் கருப்பாக மாறும். இதற்கு முதலில் கின்னத்தில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனோடு ஒரு ஸ்பூன் அளவுக்கு கருஞ்சீரகத்தை சேர்க்க வேண்டும்.

இதனோடு இரண்டு டீஸ்பூன் விளக்கெண்ணெயையும் சேர்க்க வேண்டும். தொடர்ந்து விளக்கெண்ணெய் எடுத்ததைப் போல் இருமடங்கு அளவுக்கு பாதாம் எண்ணெயை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது இந்த கலவையை நன்றாக கலக்கி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை இரண்டுநாள்கள் வெயிலில் வைக்க வேண்டும். அதன் பின்னர் முடியில் தேய்க்கலாம். இதை குளிப்பதற்கு முன்னர் சிறிதுநேரம் தேய்த்துவிட்டு குளிக்கலாம்.

இதில் நாம் சேர்த்திருக்கும் வெந்தயம் நம் தலைமுடியின் கருமையை மெயிண்டைண் செய்யும். இதை தொடர்ந்து பயன்படுத்தும்போது நம் முடி கருப்பாகும். ஆனால் சைனஸ், ஜலதோஷம் பிரச்னை இருப்பவர்கள் இதை பயன்படுத்தக்கூடாது. இதில் நாம் சேர்த்திருக்கும் விளக்கெண்ணெய் அதிக குளிர்ச்சி என்பதால் அவர்கள் இதை தவிர்க்க வேண்டும். வாரத்துக்கு மூன்றுநாள்கள் இதை தலைக்கு தேய்த்து சிறிது நேரத்துக்கு பின்னர் நாம் வழக்கமாக யூஸ் செய்யும் ஷேம்பைப் போடலாம். முயற்சித்து பாருங்களேன்.