சில நிமிடத்தில் உங்கள் நரை முடி கரு, கருன்னு மாறணுமா..? சூப்பர் டிப்ஸ் இதோ…!
முன்பெல்லாம் வயதானால் தான் முடி நிறைக்கும். ஆனால் இப்போது பாஸ்ட் புட் கலாச்சாரம், இளைஞர்களைக் குடி கொண்டிருக்கும் அதீத டென்ஷன் ஆகியவற்றால் இப்போதெல்லாம் சிறுபிராயத்திலேயே முடி நரைத்துவிடுகிறது.
இந்த நரைத்த முடியைக் கருப்பாக்க இப்போது ஏராளமான டை கள் இருக்கிறது. ஆனால் அதனால் உருவாகும் நெகட்டிவ் விசயங்களும் அதிகம். இந்த சூழலில் தான் நரைத்த முடியை கருப்பாக்க சில இயற்கை வழிமுறைகளே போதும். அதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
காடு, வேலிகளில் கரும்பூலா செடி அதிகம் கிடைக்கும். இதை ஆடு, மாடு ரொம்பவே விரும்பிச் சாப்பிடும். இதை வட்டார வழக்கில் கருப்பு பூலா செடி எனவும் சொல்வார்கள். இந்த மூலிகை பிற மரம், செடிகளில் பந்தல் போல் படர்ந்து கிடக்கும். இதன் பழம் கருப்பாக இருக்கும். இந்த செடியின் குச்சியில் தினமும் பல் விலக்கினால் பல்லில் இருக்கும் மஞ்சள் கறை, ரத்தம் வடிவது ஆகியவை போயிடும். இந்த குச்சியில் தொடர்ந்து பல் தேய்த்தால் ஈறு பலப்படும்.
இதன் இலை ரத்த மூலம், ஆண்மை குறைவுக்கும் சிறந்த மருந்து. இந்த செடியின் இலையை நன்கு அரைத்து குளிக்கச் செல்லும் முன்பு வேர் வரை ஊடுருவும் அளவுக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்துவந்தால் தலைமுடி நன்கு வளரும். உடலுக்கும் குளிச்சியாக இருக்கும். கரும்பூலா செடி பழத்தில் ஒரு கை அளவுக்கு பறிச்சு, மை போன்று அரைத்து இளநரை உள்ளவர்கள் தலையில் தேய்த்து சிறிது நேரத்துக்குப் பின்னால் குளித்து வந்தால் முடி கரு,கருன்னு வரும். இளநரை மாறும்.
பிறக்கென்ன நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்…