மணமகன் சொன்ன ஒரு வார்த்தை… நிச்சயதார்த்தம் நெருங்கிய நிலையில் திருமணத்தையே நிறுத்திய மணப்பெண்.. உருக வைக்கும் பாசப்பதிவு…!

பெண் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் மீது வைக்கும் பாசம் அளவிடவே முடியாதது. ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகள் அலாதியான பாசம் கொண்டவர்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், பெங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அந்த பெண்ணின் தாய்க்கு திடீரென சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரு சிறுநீரகங்களுமே பழுதாகி விட்டதாகவும், உடனே மாற்று சிறுநீரகம் ஏற்பாடு செய்து அறுவை சிகிட்சை செய்ய வேண்டும் எனவும் சொன்னார்கள். அதேநேரத்தில் அந்த இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தமும் நடக்க இருந்தது.

அந்த இளைஞனிடம், இளம் பெண், தன் தாய்க்கு சிறுநீரகம் பழுதுபட்டிருக்கும் விசயத்தைச் சொல்லி, தான் அவருக்கு தனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்ய இருப்பதாக சொல்லி அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு அந்த வாலிபர் சம்மதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த இளம்பெண் தன் கல்யாணத்தையே நிறுத்திவிட்டார்.

பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வைத்து அவரது தாய்க்கு தன் ஒரு சிறுநீரகத்தையும் தானமாகக் கொடுத்துவிட்டார். பொதுவாக திருமணம் முடியாத பெண்களிடம் இருந்து சிறுநீரகத்தை தானம் பெறுவதில்லை. அவர்களது திருமண பேச்சுக்கு அது சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் அனுமதிப்பதில்லை. ஆனால் இந்த பெண் பிடிவாதமாக இருந்து பாசப்போராட்டம் நடத்தி ஜெயித்திருக்கிறார் என்கிறார்கள் அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள்!

மெச்ச வேண்டிய பெண் தானே நண்பர்களே…

You may have missed