ப்பா என்ன ஒரு ஆட்டம் பாருங்க.. மார்டர்ன் உடையில் பரதம் மிக்ஸ் செய்து ஆடி கலக்கிய சகோதிரிகள்..

முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு எல்லாம் கேளிக்கைகளுக்கும், பொழுதுபோக்கிற்குமே வாய்ப்பு இருக்காது. ஆனால் இன்றெல்லாம் அப்படி இல்லை. பெண்கள் சகலத்திலும் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் நடனத்திலும் அவர்கள் வேற லெவல் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போதெல்லாம் சினிமாவில் பேமஸான பாடல்களுக்கு இளம்பெண்கள் ஆடும் நடனம் இணையத்தில் அவ்வப்போது வைரல் ஆகியும் விடுகிறது.

அதிலும் நம் பாரம்பர்யமான பரதநாட்டியத்தையே இங்கே மோகன் சகோதிரிகள் என பிரபலமாக அறியப்படும் முக்தி, மற்றும் சக்தி ஆகியோர் சமகாலத்தோடு மிக்ஸ் செய்து வேற லெவலில் ஆடுகின்றனர். வழக்கமாக முழு உடலையும் பட்டுப் புடவையால் மூடிக்கொண்டு, நிறைய நகைகளைப் போட்டுக் கொள்வதற்கு மாற்றாக இதில் குறைவான ஆடையைப் போட்டு கவர்ச்சியை மிக்ஸ் செய்து பரதம் ஆடுகிறார்கள்.

இந்த சகோதிரிகள் ஆடும் நடனத்தை இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இதோ அந்த வீடியோ…

You may have missed