ஹிந்தி பிக் பாஸ்ஸில் நடந்த ரகளை.. அடித்துக்கொண்ட பெண் போட்டியாளர்கள்.. கதறி அழும் ஸ்ருதிகா..!

சின்னத்திரையில்  முக்கியமான நிகழ்ச்சியில் ஒன்றாக பார்க்கப்படுவது பிக் பாஸ். இதெற்கென்று இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது ஹிந்தியில் 18 வது சீசன்னும் தமிழில் 8 வது சீசன்னும் நடந்துகொண்டிருக்கிறது. தமிழில் சீசன் 7 வரை நடிகர் கமலஹாசன் நடத்தி வந்தார்.அவர் திடீரென விலகியதால் தற்போது சீசன் 8 விஜய் சேதுபதி நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஹிந்தியில் தொகுப்பாளராக நடிகர் சல்மான்கான் நடத்திவருகிறார். இதுவரை 17 சீசன் நடத்திய அவர் தற்போது 18 வது சீசனையும் தொடங்கினார்.  பிரபல நடிகையும் குத் விக் கோமாளி சீசன் வெற்றியாளருமான ஸ்ருதிகா ராஜ் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 18ல் கலந்து கொண்டார். இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது. மேலும் இவர் சீசன் 18 ல் கலந்து கொண்டு  பாலிவூட்  ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் தற்போது இவரின் உண்மை குணங்களை தெரிந்து கொண்டு ரசிகர்களும் இவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இந்நிலையிலையில் இவருடைய நண்பர் ஷில்பாவிடம் ஏற்பட்ட சண்டையினால் கடந்த சில வாரங்களாக சோர்வாகவே கண்ணப்பட்டார் ஸ்ருதிகா. இந்நிலையில் இவருடைய இன்னொரு நண்பரான சும்மிருக்கும் இவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சம் ஸ்ருதிகாவை அமுக்குவதும் கிழே தள்ளிவிட்டு சண்டை போட்டு வருவதுமாக ப்ரோமோ வெளிவந்துள்ளது. அதில் ஸ்ருதிகா கதறி அழுகிறார். இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.