உலகநாயகன் கமலின் தோள் மீது அமர்ந்திருக்கும் சிறுவன் யார் என தெரிகிறதா..? இவரும் சீரியல் பிரபலம் தான்…!

கமலஹாசன் நடித்து ஜப்பானில் சூட் செய்யப்பட்ட படம் ஜப்பானில் கல்யாண ராமன். உலகநாயகன் கமல்ஹாசன் இதில் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். எஸ்.பி. முத்துராமன் இயக்கியிருந்தார்.

ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் படம் முழுவதுமே கமல்ஹாசனோடு குட்டி பையன் ஒருவன் வருவாம். பல் கொஞ்சம் நீளமாக இருக்கும் அந்த குட்டிப் பையனின் நடிப்பு இந்தப் படத்தில் நன்கு பேசப்பட்டது. டிங்கு என்கிற அருண்காந்திற்கு இந்தப் படத்தின் மூலம் ரொம்பவும் நல்ல பெயர் கிடைத்தது.

ஜப்பானில் கல்யாண ராமன் மட்டுமல்லாது, தேவர் மகன், வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினிகாந்த் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமல்லாது, சின்னத்திரையில் கோலங்கள், கனா காணும் காலங்கள், அலை ஓசை சீரியல்களிலும் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாது நடனத்திலும் அசத்தும் டிங்கு விஜ்ய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட் டைட்டில் வின் செய்தவர் ஆவார். இவர் பிரபல நடிகர் வெங்கட் போஸின் நெருங்கிய உறவினரும்கூட! கடந்த 2010ல் சுப்ரியா என்பவரைத் திருமணம் செய்த டிங்கு கருத்துவேறுபாட்டால் அண்மையில் பிரிந்துவிட்டார். அதன் பின்னர் கவிதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட டிங்கு, அங்கு நடனப்பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறார்.

ஜப்பானில் கல்யாண ராமனில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது அவர்தான் என்பதை அறிந்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.

You may have missed