இந்த ராசி உடையவர்கள் கடைசி வரைக்கும் சிங்கிளாதான் இருப்பாங்களாம்.. ஜோடி சேர்வது ரிஸ்க் தான்.. யாரெல்லாம் தெரியுமா?

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். திருமணத்தைப் பொறுத்தவரை பெரியவர்கள் முதலில் ராசி, நட்சத்திரத்தைப் பார்த்து அதில் பொருத்தம் இருந்தால் மட்டுமே அடுத்தகட்டத்துக்கு நகர்வார்கள். இந்நிலையில் சில ராசிகளோடு, சிலருக்கு செட்டே ஆகாது. அது எந்த..எந்த ராசியென தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

கன்னி

தங்கள் வேலையில் எப்போதும் இவர்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள்.உடைந்த உறவுகளையோ, சேதமான காதலைப்பற்றியோ இவர்கள் பேசுவதும், கவலைகொள்வதும் மிக,மிகக்குறைவு. இவர்களது திட்டங்களும், குறிக்கோளும் வேறானவை. வாழ்க்கைத்துணைக்கும் இதேபோல் தனித்துவமான குணங்கள் இல்லாவிட்டால் அந்த உறவை தள்ளிவிட்டு தனித்து இருக்கவும் விரும்புவார்கள்.

மிதுனம்..

இவர்களது மூளையும், மனதும் எப்போதும் தனிமையை விரும்பும். இவர்கள் உறவுகளுக்குள் அதிகசிக்கலை சந்திப்பதால் பெரும்பாலும் தனிமையில் இருக்கவே விரும்புவார்கள்.

கடகம்

அதீத உணர்ச்சிவயப்படக் கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கான வாழ்வை அவர்கள் வாழவும் விரும்புவார்கள். தன்னை காயப்படுத்தும் விசயங்களைக் கொண்டே தன்னை பலப்படுத்திக்கொள்ளும் இவர்களும் தனிமையில் இருப்பதையே பிரதானமாக விரும்புவார்கள்.

தனுசு

சுய சுதந்திரத்தை பெரிதும் மதிப்பவர்கள் இவர்கள். தனது இணையை தவறாக நினைக்கும்பட்சத்தில் அவரோடு வாழ்வதைவிட தனித்து வாழலாம் என இவர்கள் முடிவெடுப்பார்கள்.

கும்பம்

உறவுகளின் மேன்மையை இவர்களுக்குச்சொல்லி புரியவைப்பது கடினம். பொதுவாகவே இல்லற வாழ்வு தன்னைக் கட்டுப்படுத்தும் என்பதால் அதன்மீது இவர்களுக்கு நாட்டம்குறைவு. இயல்பாகவே இவர்களுக்குள் தனிமையில் இருப்பதே சுதந்திரமானது என்னும் சிந்தனை இருக்கும்.

சிம்மம்

இவர்கள் ஆதிக்கம்செலுத்தும் நபர்களாக இருப்பார்கள். ஆளுமைத்திறனால் இவர்களைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். இதனாலேயே உறவுகளின் மேன்மை தெரியாது. இதேபோல்; இவர்களுக்கு தன் இமேஜ் மோகத்துக்கு முன்பு குடும்ப உறவுகளிடம் சமரசம் செய்யமுடியாது.

You may have missed