எளிய முறையில் நடந்த நடிகர் ஜெயராம் மகன் நடிகர் காளிதாஸ் திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் வலம் வந்தவர் தான் நடிகர் ஜெயராம். இவருடைய மகன் தான் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான காளிதாஸ் ஜெயராம். நடிகர் காளிதாஸ் தாரணி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். இந்நிலையில் அவர்களின் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. மேலும் இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த வருடம் நடந்து முடிந்தது.
மேலும் இவரின் வருங்கால மனைவியான தாரணி மிஸ் தமிழ்நாடு பட்டத்தையும் பெற்று மேலும் மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார். மேலும் இவர் விளம்பர படங்களில் நடிகை தீபிகா படுகோனுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் காளிதாஸ் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். மேலும் அவர் தமிழில் ராயன், பாவக்கதைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் டிசம்பர் 8 ம் தேதி குருவாயூர் கோவில் வைத்து எளிய முறையில் இரு வீட்டாரின் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அப்போது அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பிரீ வெட்டிங்கில் பேசிய ஜெயராம் தனது ,மகனுடைய கல்யாணம் எங்களுடைய கனவு என்று மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார். மேலும் இந்த ஜோடிகளுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
pic1
pic2
pic3