நான்கே மாதங்கள் கருவேப்பிலையை பச்சையாக சாப்பிடுங்கள்… உங்கள் உடலில் எவ்வளவு மாற்றங்கள் நடக்கும் தெரியுமா..!

பொதுவாக ஒருவரை குறைத்து மதிப்பீடு செய்பவர்கள் அவன் ஒரு கருவேப்பிலை மாதிரி என சாதாரணமாக சொல்லி விடுவார்கள். ஆனால் இந்த கருவேப்பிலையில் தான் பல மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கிறது.

சாப்பாட்டில் கருவேப்பிலை இருந்தாலே நம்மவர்கள் அதை எடுத்து தூக்கி வீசிவிடுவார்கள். இந்த கருவேப்பிலையில் விட்டமின் ஏ, பி, பி 2, சி, கால்சியம், இரும்பு சத்தும் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கும் மிகவும் பயன்படும்.

சரி இந்த கருவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நடக்கும் என இனி பார்ப்போம். காலையில் வெறும் வயிற்றில் தினமும் 15 கருவேப்பிலை இலைகள் சாப்பிட்டால் கொழுப்பு கரையும். இதன் மூலம் இடுப்பு சதையும் குறையும்.

காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன் கொஞ்சம் கருவேப்பிலையும் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை நீங்கும். தினசரி காலையில் கருவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை நோயும் கட்டுக்குள் வரும்.

இதேபோல் கருவேப்பிலையை தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது கெட்ட கொழுப்புகளை கரைத்து இதயத்தை பலப்படுத்தும். பெருந்தமனி தடிப்பையும் போக்கும். இப்படி தினம் கருவேப்பிலை சாப்பிடுவது செரிமான பிரச்னையை தீர்க்கும். முடி வளர்ச்சியை தூண்டும்.

இதேபோல் ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு கருவேப்பிலைப் பொடியை தேன் கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டால் சளி பிரச்னை தீர்ந்துவிடும். இதேபோல் கருவேப்பிலை கல்லீரலில் தேங்கி இருக்கும் நச்சுக்களையும் நீக்கும்…

இப்போ சொல்லுங்க இனி எதையும் ஒன்றும் இல்லாத விசயத்தை கருவேப்பிலையோடு ஒப்பிட மாட்டீர்கள் தானே?

You may have missed