எலுமிச்சை தோலை இப்படி பயன்படுத்துங்க… குதிகால் வெடிப்பை சுலபமாக சரி செய்திடலாம்…
என்ன தான் பார்க்க நச்சென்று அழகாக இருந்தாலும் உச்சி முதல் பாதம் வரை நன்றாக இருந்தால் தான் லட்சணமாக இருக்கும். அந்த வகையில் பலருக்கும் குதிகால் வெடிப்பு பெரும் பிரச்னையாக இருக்கும்.
இதனால் அழகு குறைவாக தெரிவது ஒருபக்கம் என்றால், இவர்கள் அனுபவிக்கும் வலியும் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அவர்களால் கொஞ்சம் கல்லு, மண்ணான பாதைகளில் நடக்கவும் முடியாது.
இதனை நாம் நன்றாகத் தூங்கியே துரத்த முடியும் என்றால் நம்ப முடிகிறதா? இதற்கான மேட்டர் சிம்பிள். முதலில் ஒரு பெரிய எழுமிச்சையை எடுத்துக்கணும். அதை இரண்டு துண்டுகளாக வெட்டி, அதில் இருக்கும் சாறை பிழிந்து அகற்றி விடணும். இப்போது அந்த தோலை குதிகாலில் படும்படி வைக்கணும். வெடிப்பு பகுதி முழுவதும் வைப்படு நல்ல பலன் தரும். இப்போது அது வெடிப்பு பகுதியில் இருந்து நகர்ந்து விடாமல் சாக்ஸை அணியலாம். இது அதை அப்படியே இருக்க வைத்து சருமத்தின் வறட்சி, வெடிப்புகளை போக்கும்.
இரவு தூங்கும்போது இப்படிச் செய்தாலே போதும். கூடவே இதனால் இன்னொரு பலனும் இருக்கிறது. எழுமிச்சையில் இருந்து வரும் வாசம், தூக்கமின்மை பிரச்னையையும் போக்கும். காலையிலேயே உங்கள் குதிகால் வெடிப்பு குறைந்து இருப்பதைப் பார்க்க முடியும். இதை இரண்டு, மூன்று நாள்கள் முயற்சித்து பாருங்கள்.வித்யாத்தை உணர்வீர்கள்!