தன் முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கும் 5 ராசிக்காரர்கள் இவர்கள் தான்…

’ஓ தென்றலே’ எனத் தொடங்கும் இளைய தளபதி விஜய்பாடும் பாடலில் ‘முதல் காதல் முதல் முத்தம் இரண்டும் மறக்குமா?’என ஒரு வார்த்தைவரும். அது வெறுமனே வார்த்தை மட்டுமல்ல. அது ஒரு உணர்வுநிலை. அந்தவகையில் 5 ராசிக்காரர்கள் தங்கள் முதல் காதலை வாழ்நாளிலேயே மறக்கமாட்டார்கள்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கடகம்

இவர்கள் உணர்ச்சிவயப்படக் கூடியவர்கள். இவர்கள் அதனால் தங்கள் எல்லா நினைவுகளையும் அழிக்க முயல்வார்கள். ஆனால் அது அவர்களுக்கு எளிதில் கூடாது. இதற்காக நீண்டகாலம் எடுத்துக்கொள்வார்கள். முதல் காதல் கைகூடாமல் அடுத்து வேறு கமிட்மெண்ட் ஆனாலும் அவர்களால் முதல் காதலை மறக்கமுடியாது.

சிம்மம்

இவர்களது முதல்காதல் ஏராளமான உணர்ச்சிகளால் நிரப்பப்பட்டு இருக்கும். இவர்கள் முதல் காதல் ஜெயிக்காமல் போனாலும் அவர்களால் அதை மறக்கவே முடியாது. இவர்கள் வாழ்வில் பல வெற்றிகளைப் பெறுவார்கள். ஆனாலும் தங்கள் முதல் காதலின் நேசம் அவர்களின் ஆழ்மனதில் இருக்கும்.

மீனம்

இவர்கள் முதல் காதல் ஜெயிக்காவிட்டால் அதில் இருந்து மீள்வது சாத்தியமே இல்லாத விசயம். அவர்களுக்கு காதல் ஜெயிக்காவிட்டாலும் அந்த உறவைக் கைவிட மாட்டார்கள். உணர்ச்சிகளை வெளியில் சொல்லாவிட்டாலும் ரகசியமாக அவர்களுக்காக காத்திருப்பார்கள்.

ரிஷபம்

இவர்கள் பிடிவாதக்காரர்கள். காதல் தோற்றுவிட்டால் புதிய உறவுடன் இணைந்து வாழ்வை நகர்த்த இவர்களுக்கு நீண்டகாலம் தேவைப்படும். அதைவிட பழைய உறவில் நீடிப்பதையே விரும்புவார்கள். இவர்கள் அதிலும் முந்தைய காதலன்/காதலியின் பெயர், உருவத்தோற்ற ஒற்றுமையுள்ளோரையே தேடுவார்கள்.

துலாம்

இவர்களால் முதல் காதலை நினைத்து பொறுமையாக இருக்கவே முடியாது. இவர்கள் தங்கள் முதல் காதலரோடு தெளிவான இடைவெளியைக் கொண்டிருந்தாலும் அவர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது இவர்களுக்கு வரும். புதிய உறவில் இவர்கள் இணைந்தாலும் முந்தைய காதலின் நினைவை அது தடுக்காது.

You may have missed