உங்கள் உடலில் வரும் மருக்களை ஈஸியா போக்க, இயற்கைமுறையில் இத யூஸ் பண்ணுங்க..!

தலைமுறை, தலைமுறையாக தொடரும் சருமப் பிரச்னைகளில் மருத்தொல்லையும் ஒன்று. இது பாப்பிலோமா வைரஸால் வருகிறது. பொதுவாகவே மருவை சருமத்தில் கூடுதலாக வரும் திசுக்களின் கூட்டு என்றே சொல்வார்கள்.

மரு ஏன் வருகிறது தெரியுமா? நாம் நம் கழுத்தில் எடை கூடுதலான அணிகலன்களை அணியும்போது அவை அழுத்தப்பட்டு ரத்த ஓட்டம் தடைபடும். அதுவும் சருமத்தை முறையாக பராமரிக்காததும்தான் இதற்கு காரணமாகிறது. வீட்டிலேயே மருத்தொலையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..

அன்னச்சிப்பழத்தை சாறு எடுத்து மரு உள்ள இடத்தில் தேய்த்து அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். தொடர்ந்து அதை வெது,வெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். பத்துநாள்கள் இதை தொடர்ந்து செய்தால் மாற்றத்தை பீல் செய்யலாம். இதேபோல் ஒரு துண்டு இஞ்சியை மரு இருக்கும் இடத்தில் தொடர்ந்து இரண்டு வாரத்துக்கு தேய்த்தால் மரு உதிர்ந்துவிடும்.

இதேபோல் ஆளிவிதையை பேஸ்ட் போல் அரைத்து தினமும் பருவில் தடவலாம். இதேபோல் தினமும் மருவின் மேல் கற்பூர எண்ணெயை தடவினாலும் மரு உதிர்ந்துவிடும். இதேபோல் சுண்ணாம்பை மருவின் மீது தடவினாலும் மரு உதிரும். பூண்டு சாறை மரு இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணி கட்டி 20 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். இதேபோல் கற்றாழை ஜெல்லை மரு இருக்கும் இடத்தில் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இதேபோல் அம்மான் பச்சரிசி மூலிகையில் கிடைக்கும் பாலை மரு, முகப்பரு மீது தடவினால் நல்லபலன் கிடைக்கும். இதேபோல் ராத்திரி தூங்குவதற்கு முன்பு, வெங்காயத்துண்டில் உப்பு தேய்த்து ஊறவைத்து காலையில் எழுந்து அதை பேஸ்ட் போல் அரைத்து அதை மரு இருக்கும் இடத்தில் தடவி ஊறவைத்து கழுவ வேண்டும். இதேபோல் ஆப்பிள் சிடர் வினிகரை மரு உள்ள இடத்தில் காட்டன் துணி கொண்டு தேய்த்து வந்தாலும் மரு உதிர்ந்துவிடும்.

இதையெல்லாம் முயற்சித்துப் பாருங்களேன் நண்பர்களே…

You may have missed