அடடே நீலிமாவின் அம்மாவா இது.. அம்மா, மகள், பேத்தி நிற்கும் அழகிய புகைப்படம்…

தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழின் உச்சத்துக்கே போன நடிகைகள் பலர் உண்டு. அவர்களில் நீலிமாவும் ஒருவர். அவர் இப்போது தன் செல்லக் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

1986ல் சென்னையில் பிறந்த நீலிமா 1992ல் சிவாஜி, கமல் நடிப்பில் சக்கைபோடு போட்ட தேவர் மகனில் குழந்தை நட்சத்திரம் ஆக நடித்து இருப்பார்.

அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன், சிம்பு நடித்த தம் உள்ளிட்ட படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

ஒருகட்டத்தில் மொழி, சந்தோஷ் சுப்பிரமணியன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகை ஆனார். நான் மகான் அல்ல படத்துக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் பெற்றார். முதன் முதலில் தெழுங்கு சீரியல் ஒன்றிலும் தலைகாட்டினார் நீலிமா.

அதன் பின்னர் தமிழ், தெழுங்கு சீரியல்களில் முக்கிய ரோல்கலில் நடிக்கத் துவங்கினார். காதல் மணம் புரிந்த நீலிமா பல தமிழ் சீரியல்களிலும் வித்தியாசமான கேரக்டர்களில் தத்ரூபமாக நடித்த வருகின்றார்.

தன் இன்ஷ்டாகிராமில் தன் அம்மா, மகள் ஆகியோருடன் இருக்கும் படத்தை வெளியிட்டு உள்ளார் நீலிமா. அதன் கீழே அவரது ரசிகர்கள் சோ ஷ்வீட் என பதிவிட்டு வருகின்றனர். விரைவில் இந்த குட்டிப் பெண்ணும் குழந்தை நட்சத்திரமாக வந்து விடுவார்….

pic1

pic2

pic3

You may have missed