உங்க வீட்டில் இந்த செடிகளை மட்டும் வளர்த்துப் பாருங்கள்.. எந்த நோயும் உங்களை நெருங்காது…

வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டும் என்னும் விருப்பம் எல்லாருக்கும் இருக்கும். அதேநேரம் எதை வளர்க்கிறோமோ, இல்லையோ குறிப்பிட்ட சில செடிகளை வளர்ப்பதன் மூலம் நம் ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ளலாம். அதை சாப்பிடுவதன் மூலம் நமக்கு புத்துணர்வும், உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். வாருங்கள்..அவை என்ன செடிகள் என பார்க்கலாம்.

இஞ்சி..

பொதுவாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இஞ்சியில் வைரஸ்களை எதிர்த்துப் போராடும் ஆண்டி வைரஸ் பணொஉகள் அதிகம் உள்ளது. இதேபோல் இஞ்சியில் உள்ள ஜின் ரெரோல், நிங்கரோன் ஆகியவை வைரஸ் பெருக்கத்தை தடுக்கும். இவை வைரஸ்ஸை செல்களுக்குள் நுழையவிடாமலும் போராடும்.

அதிமதுரம்..

இதில் உள்ள சிளைசிரைசின், லிகுரிடிஜெனின், கிளாபிரிடின் ஆகியவை வைரஸ்க்கு எதிராக போராடும். சீனர்கள் இதை அதிகம் பயன்படுத்தியே கரோனாவில் இருந்து மீண்டனர். கொழுப்பை கரைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

புதினா..

புதினாவில் ஆண்டி வைரல் பண்பு உள்ளது. இதை அடிக்கடி சமையலில் சேர்த்துவர கரோனா காலத்தில் நோய் எதிர்ப்புத்தன்மை கூடும். உடலுக்கு குளிர்ச்சியூட்டுவதோடு, வயிற்றுக் கோளாறுகளையும் நீக்கும்.

பூண்டு..

சமையலுக்கு பரவலாகவே நாம் பூண்ட பயன்படுத்துகிறோம். இதில் ஆண்டி வைரல் பண்பு அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை பூண்டுக்கும் உண்டு.

கற்பூரவள்ளி..

இது புதினா குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் உள்ள கார்வாக்ரோல் ஆண்டி வைரல் பண்பை வழங்கும். கற்பூரவள்ளியை வெறும் வாயில் சாப்பிட்டால் நல்ல பலன் கொடுக்கும்.

துளசி..

துளசியிலும் ஆண்டி வைரல் பண்பு அதிகம். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் துளசியை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கிருமி தாக்கமும் போகும்.

சோம்பு..

சமையலில் வாசத்துக்கு சோம்பை சேர்ப்போம். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைக்கும்.

பிறகென்ன சாதாரணமாக நம் வீட்டில் கிடைக்கும் இந்த மூலிகைகளை சாப்பிட்டே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டிவிடலாம். இதில் உங்களால் வளர்க்க முடிந்ததை உங்கள் வீட்டில் வளர்க்கலாம்.

You may have missed