நான் நடித்த காட்சிகளை படத்தில் இல்லை… பின் எதற்காக 55 நாட்கள் நடித்தேன்… வருத்தப்பட்டு பேசிய பிரியா பவானி சங்கர்…
தமிழ் சினிமாத்துறையில் முதலில் செய்தியாளராக வந்து பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் தொடரில் நாயகியாக கலக்கி அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் நடித்த முதல் படமே அமோக வெற்றியை கொடுத்தது.முதல் படமே வெற்றி படமானதை தொடர்ந்து இவர் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.
இவரின் சில படங்கள் தோல்வியை தழுவினாலும் பல படங்கள் வெற்றியை கொடுத்துள்ளது .இவரை சில பேர் ராசிகெட்டவர் என்றெல்லாம் கூறினர்.அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இவரின் டிமான்டி காலனி 2 மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இந்தியன் 2 இவருக்கு வெற்றியை கொடுக்காததால் இப்போது இவர் மிக கருத்துள்ள படங்களை மட்டுமே கேட்டு நடிக்குறார்.
இதை தொடர்ந்து இவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் நான் ஒரு படத்தில் மிக கஷ்டப்பட்டு மழையிலும் வெயிலிலும் நடித்தேன்.ஆனால் டப்பிங் பேச போகும் போதுதான் தெரிந்தது நான் நடித்த பல காட்சிகளை காணவில்லை என்று எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் கஷ்டமாகவும் இருந்தது என்று கூறினார்.இருந்தாலும் இவர் அது என படம் என்று கூறவில்லை.ஆனால் இதை பார்த்த ரசிகர்கள் பலர் ரத்னம் படமாக தான் இருக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.