நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும்… என பேசி வீடியோ வெளியிட்ட நடிகர் சத்யராஜ்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 73 வயதாகும் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஈசிஜி எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்து அவர் நலமுடன் இருக்கிறார்.விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வரும் 10 ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

மேலும் அவர் இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். எப்பொழுதும் சினிமாவில் பிஸியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திடீரெனெ நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த தகவலை குறித்து நடிகர் சத்யராஜ் தன்னுடைய நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார்க்காக அவருடைய ரசிகர்களும் பிராத்தனை நடத்தி வருகிறார்கள். நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். மேலும் தற்போது நடிகர் சத்யராஜ் கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்பது குறிப்பிடதக்கது மேலும் சத்யராஜ் பேசி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.