ராக்காயி படத்தில் திர்லிங் கதாபாத்திரத்தில் நயன்தாரா.. வெளியானது டீசர்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை அமைத்து கொண்ட இவருக்கு பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது நடிக்கும் படங்கள் டெஸ்ட், மண்ணாங்கட்டி, முக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டுடென்ட்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இவர் நடிப்பில் இன்று வெளிவந்த ஆவணபடம் Nayanthara Beyond the Fairy Tale. இன்று நயன்தாராவின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் ராக்காயி படத்தின் டீசர் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் அவர் ஒரு வித்தியாசமான காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் பல பேரை வெட்டி சாய்ப்பது போன்று திரில்லிங்கான காட்சிகளில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.