தளபதி விஜய் அருகில் இருக்கும் இந்த சிறுமி யார் என்று தெரிகிறதா..? சின்னத்திரைகளில் கலக்கிய தற்போதைய ட்ரெண்டிங் நடிகை தான்..

அண்மைக்காலமாக வந்த திரைப்படங்களில் மெகா ஹிட் ஆன திரைப்படம் ராட்சசன். பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் விஷ்ணு விஷால், அமலாபால் நடித்த ராட்சசன் வசூல், விமர்சனரீதியாக பெறும் வெற்றி பெற்றது.

இந்த ராட்சசன் படத்தில் விஷ்ணுவிசாலின் அக்கா பொண்ணாக வந்த அம்மு அபிராமி அனைவரையும் கவர்ந்தார். அவருக்குப் பின் படத்தில் ஒருசில காட்சிகளே நடித்திருந்தாலும் படத்தில் முக்கிய கேரக்டராக வலம்வந்தது அம்முவின் பள்ளி தோழியாக நடித்த ரவீனாதான்.

இவர் அந்தப்பள்ளியின் ஆசிரியரால் தனக்கு ஏற்பட்ட பெரும் துயரத்தை வசனமே இல்லாமல் வெறுமனே பார்வையாலேயே கடத்தியிருப்பார். இவர் இதற்கு முன்பு இளைய தளபதி விஜய், மோகன்லால் கூட்டணி போட்டு மிரட்டிய ஜில்லா திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அம்மணி இப்போது நடன நிகழ்ச்சிகள், காமெடி என பலவற்றிலும் கலந்து தன் திறமையைக் காட்டிவருகிறார்.

அம்மணிக்கு செல்லப்பிராணி வளர்ப்பும், கால்பந்தாட்டத்திலும் கொள்ளை ப்ரியம் ஆகும். ஜில்லா, ராட்சசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ரவீனா, இப்போது விறு, விறுவென வளர்ந்து ஹீரோயின் போல் ஆகிவிட்டார். அம்மணி சமீபத்தில் நடத்திய போட்டோ சூட் இப்போது வைரலாகி வருகிறது.

pic1

pic2

pic3

You may have missed