பேஸ்புக் மூலம் 23 வயது பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்ட 71 வயது பெரியவர்..!
வயது பையன்களே, காதலியின் கடைக்கண் பார்வை பட்டு விடாதா என பேருந்திலும், கல்லூரியிலும் பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் 71 வயதான ஒரு தாத்தா, 23 வயதே ஆன ஒரு கன்னிப்பெண்ணை பேஸ்புக்கில் புரபோஸ் செய்து, கல்யாணம் செய்துள்ளார். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்லோரி டேன்ஸ். இவருக்கு பிரிட்டீஸ் நாட்டைச் சேர்ந்த தாமஸ் கிரேஸ் என்ற 71 வயது முதியவருக்கும் பேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டது.ஒருகட்டத்தில் இருவரும் நேரில் சந்திக்க விரும்பினர்.
காதல் ,மன்னனான தாமஸ் கிரேஸ், தன் காதலியைச் சந்திக்க பிலிப்பைன்ஸ் நாட்டு நேரடியாகச் சென்றார். இருவரும் பல சுற்றுலா தலங்களுக்கும் சேர்ந்தே சுற்றினர். ஒருகட்டத்தில் காதல் மன்னன் தாமஸ், தன் காதலை லோரி டோன்ஸிடம் சொல்ல, அவரும் ‘’சேம் டூ யூ’’ என சொல்லி அதிர்ச்சி கொடுத்தார்.
இருதரப்பும் வீட்டில் சொல்லவே வயதைக் காரணம் காட்டி லோரி டோன்ஸ் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவரது பிடிவாதத்தால் வேறு வழியே இன்றி சம்மதித்தனர். இப்போது இந்த ஜோடிக்கு இரண்டு வயதில் குழந்தையும் இருக்கிறது. ஊரார் பகடி செய்தாலும் அதை பொருட்படுத்தாது வாழ்ந்து வருகிறது இந்த ஜோடி. தன் கணவரின் வயதெல்லாம் விசயமே இல்லை. அவரின் நீல நிற கண்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என சொல்கிறார் லோரி.
ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தன்னளவில் சந்தோசமாகவே வாழ்கின்றனர் இந்த ஜோடி!