மாஸாக என்ட்ரி கொடுத்த கார்த்தி… WWE -ல்Drew Mclntyre சேர்த்து போட்ட அதிரடி கட்சியை பாருங்க..!

இணையத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ட்ரூவ் மெக்கின்டருடன் இருக்கும் படங்கள் வைரல் ஆகி வருகிறது. நடிகர் கார்த்தியின் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ளது. குடும்பப்பாங்கான கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடிப்பதால் குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்கும் பொழுது போக்கு படங்களாக இருப்பதாலும் நடிகர் கார்த்தியின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீபத்தில் கைதி, விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். கைதி படத்தில் மகள் மேல் பாசம் கொண்ட பாசக்கார தந்தையாகவும், திகிலான திருப்பங்களோடு கதைக்களம் அமைக்கப்பட்டு ராசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதத்ததில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தனெக்கென ஒரு இடத்தை பெற்றிருப்பார்.படத்திற்கு படம் வித்தியாசமாகவும், விறு விறுப்பாகவும் உள்ள படங்களில் நடித்து வருவதால் மக்கள் கார்த்தியின் படங்களுக்கு எதிர்பார்ப்போடு தனி வரவேற்பு தருகின்றனர்.

தற்போது இணையத்தில் கார்த்தி, ஜாண் ஆபிரகாம் மற்றும் மல்யுத்த வீரர் ட்ரூவ் மெக்கின்டருடன் இணைத்திருக்கும் படங்கள் வைரல் ஆகி வருகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் இந்தியாவில் அதிகார பூர்வமாக WWE விளையாட்டை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.அதற்கான விளம்பர தூதராக ஹிந்தியில் ஜாண் ஆபிரகாமுடன் Scottish மல்யுத்த வீரர் ட்ரூவ் மெக்கின்டரும் தோன்றும் விளம்பர படங்களும், தென்னிந்தியாவில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதநாயகனாக இருக்கும் கார்த்தி அவர்களுடன் ட்ரூவ் மென்கின்டர் வரும் விளம்பரப்படத்தில் கார்த்தியும் விளம்பர தூதராக வருகிறார்கள். சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4-ல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது