சீத்தாப் பழத்துக்கு இவ்வளவு சத்தா..? இதோட இலை, விதையின் மகத்துவத்தை பாருங்க..

சீத்தாப்பழம் நன்கு இனிப்பு சுவை உடையதுதான். ஆனாலும் அது எளிதில் கிடைத்தாலும் பலருக்கும் அதன் அருமை, பெருமைகள் தெரிவது இல்லை.

இந்த சீத்தா பழம் மட்டுமல்ல அதன் இலைகளும் கூட ஏராளமான மருத்துவக்குணங்கள் கொண்டவை. சீத்தா இலைகளை நன்றாகக் கழுவி ஒரு கப் தண்ணீரில் 5 இலைகள் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து இதை வடிகட்டி குடித்து வந்தால் மூட்டுவலி, முழங்கால் வலி, வீக்கம் போய்விடும். அதேபோல் ஆறாத புண்கள் குணமாகவும் சீதாப்பழ இலைகளை அரைத்துப் போட்டால் போதும்.

ஆஸ்டீயோ போரோஸிஸ் நோய் பாதிப்புக்கும் சீதாப்பழம் நல்ல மருந்து. ஆண்களுக்கு ஏற்படும் கீழ்வாதப் பிரச்னையும், நாள்பட்ட ஆஸ்துமா நோயும் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டால் போய்விடும். இதேபோல் தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் சீத்தா இலை போட்டு டீ குடிப்பதன் மூலம் ஹார்மோனை சமநிலையில் வைக்க முடியும்.

இதேபோல் சீத்தாப்பழம் இதய வாழ்வில் இருக்கும் கொழுப்பைக் கரைத்து இதயநோய், ரத்த அழுத்தம், ரத்த சோகை வராமல் காக்கிறது. இதில் உள்ள தாமிரச்சத்து குடலுக்கு ரொம்பவும் நல்லது. இதேபோல் தினமும் காலையில் ஒரு சீத்தாப்பழம் சாப்பிட்டால் அது வயிற்றில் சுரகும் அமிலத்தன்மையை சீராக்கும். ஆரம்பநிலை காசநோயை கட்டுப்படுத்துவதிலும் சீத்தாப்பழம் முக்கியப்பங்கு வகிக்கிறது.

சீத்தா பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு செல்லை அழிக்கும் தன்மையும் அதிகம். இதனால் பக்கவாதம், மாரடைப்பும் வராது. இந்த பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுவீக்கம், மலச்சிக்கலையும் கட்டுப்படுத்தும். சீத்தாப்பழத்தின் மரப்பட்டை நீரிழுவு நோயை கட்டுப்படுத்தும்

You may have missed