தன் சொத்தை அனாதை இல்லத்திற்கு தானமாக கொடுத்த நல் உள்ளம் கொண்ட ஒரு நடிகரின் சிறு வயது புகைப்படம்.. யார் அந்த நடிகர் தெரியுமா..!

கோடி கோடியாக சம்பாதித்திருந்தாலும் உதவுவதற்கு என்று ஒரு மனப்பான்மை வேண்டும். அதிலும் சினிமா பிரபலங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் உதவவேண்டும் என்ற மனப்பான்மை சில பேருக்கு தான். அந்த வகையில் தன்னுடைய சொத்தை அனாதை ஆசிரமத்திற்கு தானமாக கொடுத்த ஒரு நடிகர். அவருக்கு தமிழ் மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. பிஸியான நடிகராக  வலம் வருபவர். கோலிவுட்டில் அவர் நடித்த முதல் படமே வெற்றி படம் என்றே சொல்லலாம். அவரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த நடிகர் யார் தெரியுமா கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார்.

இவர் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் ஆவார். இவருடைய தம்பி தான் புனித் ராஜகுமார். அவர் 46 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். அதில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த சிவராஜ்குமார் ஒரு அரியவகை நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் கேன்சர் என ரசிகர்கள் மத்தியில் பரவியது. அனால் சிவராஜ் குமார் கூறுகையில் கேன்சர் இல்லை எந்த நோய் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறினார்.

இவர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லோர் படத்தில் நடிக்கிறார். அதை தெடர்ந்து 6 படங்களில் கமிட் ஆகி உள்ளார். இவர் தன்னுடைய அப்பா கொடுத்த சொத்தை அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துள்ளார். அந்த நல்லுள்ளம் கொண்ட நடிகரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

You may have missed