உங்களுக்கு இதயம் சார்ந்த நோய் இருக்கா.. ஈஸியா தெரிஞ்சுக்க இதை செய்யுங்க போதும்..!

இன்றைய துரித உணவு கலாச்சாரத்தில் நம்மை அச்சுறுத்தும் மிகப்பெரிய நோய்களில் ஒன்று இதயநோய். முன்பெல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் நாம் இதயநோயை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் இப்போது குடும்பத்துக்கு ஒருவருக்கேனும் இதயநோய் இருக்கிறது.

மாறி வரும் இன்றைய உணவுக் கலாச்சாரம் தான் இதற்கு மிக முக்கியக் காரணம். இப்படியான சூழலில் நமக்கு இதயநோய் இருக்கிறதா? அல்லது எதிர்காலத்தில் வரும் வாய்ப்பு இருக்கிறதா? என தெரிந்துகொள்ள சுலபமான ஒரு வழி இருக்கிறது.

நமது கால் விரல்களை குனிந்து தொடுவதன் மூலமே நமக்கு இதயநோய் இருக்கிறதா என அறிந்துகொள்ள முடியும். நின்ற கோலத்திலும், அல்லது தரையில் அமர்ந்தபடியும் இதை செய்யலாம். நிற்பதாக இருந்தால் நமது இரு கால்களையும் சேர்த்து நிமிர்ந்து நிற்க வேண்டும். அமர்ந்து இருந்தால் சமமான தளத்தில் கால்கள் இரண்டையும் முன்புறமாக நீட்டி உட்கார வேண்டும்.

கால் முட்டியை மடக்காமல் கைகளை நீட்டி கால் விரலை தொடுவது தான் கான்செப்ட். அப்படி நம்மால் தொட முடிந்தால் நம் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம். அப்படி தொட முடியவில்லையெனில் நமக்கு சிக்கல் இருக்கிறது.அதாவது தொப்பை இருப்பவர்கள், அதிக கொழுப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்களால் இதைச் செய்ய முடியாது. இதெல்லாம் உள்ளவர்களுக்கு இதயநோய் வருவதற்காக வாய்ப்பும் அதிகம். அதனால் இப்போதே இதைச் செய்து பாருங்கள்.

செய்ய முடிந்தவர்கள் கொண்டாடுங்கள். செய்ய முடியாதவர்கள் உடம்பை குறைத்து, ஆரோக்கிய உணவுப் பழக்கத்துக்கு மாறுங்கள்.

You may have missed