சூர்யா 45 படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகல்.. புதிதாக என்ட்ரி கொடுக்கும் இசையமைப்பாளர் யார் தெரியுமா.. வெளியான தகவல்கள்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவருக்கு வெளிவந்த படம் கங்குவா. இதை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தினை நடித்து வருகிறார். மேலும் ட்ரீம் வாரியார் பிசட்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்க கூடிய படம் சூர்யா 45. இந்த படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கமிட் ஆகி இருந்தார்.
அவர் திடீரென விலகுவதாக தகவல்கள் வெளிவந்தன. அவர் எதனால் விலகுகிறார் என்ற கரணம் யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கமிட் ஆகி உள்ளார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்ரீம் வாரியர் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் கட்சி சேரா, ஆச கூட போன்ற ட்ரெண்டிங் பாடல் மூலமாக பிரபலம் ஆனவர்.
மேலும் ஏ ஆர் ரகுமான், அனிரூத், ஜி வி பிரகாஷ் போன்றோருடன் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லாகவா லாரென்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தின் மூலமாக தன்னுடைய இசை பயணத்தை ஆரம்பிக்க உள்ளார என்பதும் குறிப்பிடத்தக்கது.