பல் சொத்தை, பல் உடைதல்,ஈறுகளில் ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே தீர்வு…

முன்பெல்லாம் நம் முன்னோர்கள் வேப்பங் குச்சி கொண்டு பல் துலக்குவார்கள். இப்போது பேஸ்ட், பிரஸ் என பாரம்பர்யத்தை தொலைத்துவிட்டு வெகுதூரம் வந்துவிட்டோம். ஆனால் அன்று இருந்த ஆரோக்கியமான பல்கள் இன்றைய தலைமுறையிடம் இல்லை.

பற்கள் பல வகையிலும் பாதிக்கப்படும். அவற்றையும், அதன் தீர்வையும் இங்கு காண்போம்.

சொத்தை பல்லை துவக்கத்திலேயே கவனிப்பது சிறப்பு. இல்லாவிட்டால் எனாமலை அடுத்துள்ள டெண்டைன் பகுதிக்கும் போய்விடும். அப்போது பல்லில் கறும்புள்ளி தெரியும், அங்கு குழிவிடும். அந்த நிலையிலும் சிகிட்சை பெறாவிட்டால் பல் கூழ் மற்றும் வேர்களும் பழுதாகிவிடும். நாளடைவில் வேர்கள் வலிமை இழந்து பற்கள் ஆடத் துவங்கும். இதில் சாப்பிட்ட பொருள்கள் தேங்கிவிடும். கிறுதித்தொற்று ஏற்பட்டு ஈறுகள் வீங்கும். ஈறில் இருந்து ரத்தம் கசிந்து வாயில் துர்நாற்றம் வீடும்.

இதையெல்லாம் தவிர்க்க காலையில் தூங்கி முழித்ததும் ஒருமுறையும், இரவில் தூங்கும் முன்னர் ஒருமுறையும் பல் துலக்க வேண்டும். பல்லில் கரை இருந்தால் பிளீச்சிங் செய்யலாம். இதேபோல் தினமும் ஒரு கேரட் அல்லது வெள்ளரி சாப்பிட்டாலும் பல் சுத்தமாகும். பல்லில் ஒட்டும் தன்மையுள்ள ஐஸ்க்ரிம், சாக்லேட்லாம் அடிக்கடி சாப்பிடக் கூடாது. மது, புகையிலை, பான்மசாலா தவிர்த்தாலே பல் கொஞ்சம் ஆரோக்கியமாகும்.

பல்லில் வலி ஏற்பட்டால் பல்லை அகற்ற தான் வேண்டும் என இல்லை. அதற்கு மாற்றாக பல்வேர் சிகிட்சை செய்தும் குணப்படுத்தலாம். இப்போதைய பிஞ்ஞான வளர்ச்சியில் கீழே விழுந்த பல்லையும் கூட ஒட்ட வைக்க முடியும். பல் விழுந்த அரைமணி நேரத்தில் எச்சில் வைத்தோ, பாலில் போட்டோ அருகில் உள்ள பல் டாக்டரிடம் கொண்டு போகலாம். அதே பல்லை பொருத்தவும் முடியும். க்ளிப் போட்டு வளைந்த பல்லையும் சரி செய்யலாம்.

பல் பாதுகாப்புக்கு வீட்டிலேயே நாம் சில யுத்திகளை செய்யலாம்.

ஆயுல் புல்லிங் அதில் முக்கியமானது, காலையில் நல்ல எண்ணெயை வாயில் ஊற்றி பத்து நிமிடம் வாயில் ஊற்றில் கொப்பளிக்க வேண்டும். இதனால் வாயில் உள்ள பாக்டீரீயாக்கள் வெளியேறி விடும். இதனால் சொத்தைப்பல் உருவாகுவதையும் தடுக்கமுடியும்.

சொத்தைப்பல்லை குணமாக்க 3 துளிகள் கிராம்பு எண்ணெயை கால் டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெயுடன் சேர்த்து காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு இரவில் படுக்கும்போது, அந்த காட்டனை சொத்தைப்பல் உள்ள இடத்தில் வைத்து தூங்கணும். தினமும் இப்படி செய்தால் சொத்தைப்பல் போகும். இதேபோல் மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினாலும் கிருமிகள் அழிந்துவிடும்.

You may have missed