தாமிரபரணி படத்தில் நடித்த பானுவா இது? அவுங்க பொண்ணு என்னா க்யூட் பாருங்க..வைரலாகும் புகைப்படங்கள்..!

கற்பூர நாயகியே கனகவள்ளிப் பாடலை உட்லாப் செய்து, கருப்பான கையால என்னை பிடிச்சா என பாட்டெழுத அந்த பாடல் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அந்த மெகா ஹிட் பாடலுக்கு விசாலோடு ஆட்டம் போட்ட நடிகை பானுவை நினைவில் இருக்கிறதா? அவரது அறிமுகப்படமே அதுதான்.

அதேபடத்தில் இடம்பிடித்த தாலியே தேவையில்லை பாடலும் ஹிட் அடித்தது. அதன்பின்னர் தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பானுவுக்கோ தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் அவர் தன் கவனத்தை மலையாளத் திரையுலகு பக்கம் திருப்பினார்.

கடந்த 2015ல் பிரபல மலையாள பாடகி ரிமிடோமியின் சகோதரர் ரிங்கு டோமியை கல்யாணம் செய்தார் நடிகை பானு.

இந்த தம்பதிக்கு இப்போது இரண்டு வயதில் அழகிய பெண் குழந்தை உள்ளது. கியாரா என அந்த குழந்தைக்கு பெயர்.

நடிகை பானு இப்போது கொச்சியில் அழகுநிலையம் ஒன்று நடத்தி வருகிறார். கூடவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலிலும் நடித்து வருகிறார். இப்போது அவரது அழகான குடும்பப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pic1

pic2

pic3

pic4

You may have missed