பழங்குடி மக்களின் சொர்க்க வாழ்க்கை இப்படி தான் இருக்கும்… காட்டுக்குள் நடக்கும் கலக்கான திருவிழா…!
பொதுவாகவே திருவிழாக்களை ரசிப்பதற்கு யாருக்குத் தான் மனம்வராது? திருவிழாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எதிர்பார்த்து காத்திருப்பதையும் நாம் பார்த்திருப்போம்.
அதுவும் சமவெளிப்பகுதியில் நடக்கும் திருவிழாக்கள் அனைவருமே போய் வருகிறோம். அதிலும் பிரசித்திபெற்ற கோயில் திருவிழாக்களை பெரிய, பெரிய சேனல்கள் நேரலையே செய்துவிடுகின்றன. ஆனால் காட்டுக்குள் நடக்கும் பழங்குடியின விழாக்கள் குறித்து பெரிதாக பரவலான மக்களின் கவனத்திற்கு உள்ளாகவில்லை. இந்நிலையில் ஒரு இளைஞர் பழங்குடிசமூகத்திற்குள் நடக்கும் திருவிழாவைப் போய் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
அந்த இளைஞர் இதற்காகவே காட்டுக்குள் போயிருக்கிறார். அங்கே கானகம், ஜிலு ஜிலுவெனக் காற்று, பாய்ந்தோடும் நீர் சூழல் ஆகியவற்றுக்கு நடுவே பலி கொடுப்பதற்காக ஆடு, கோழியையும் கொண்டு வந்துள்ளனர். மாறாத அன்போடு இந்த காட்டுத் திருவிழாவில் பழங்குடி சமூக மக்கள் தங்கள் பாரம்பர்யமான நடனம் ஆடுவதும், சாமிக்கு பூஜையிலும் ஈடுபடுகின்றனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.