“வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன்…” இந்த நடிகரை ஞாபகம் இருக்கா… தற்போது என்ன தொழில் செய்கிறார் பாருங்கள்..!

சிலர் பல படங்களில் நடித்திருந்தாலும் அதற்குரிய ரீச் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். ஆனால் சிலரோ ஒரே ஒரு படத்திலேயே புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். அந்த வகையில் லிவிங்ஸ்டன் ஹீரோவாக நடித்த படம் தான், ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ இந்தப் படம் பட்டி, தொட்டியெங்கும் மெகா ஹிட் ஆனது

இந்தப் படத்தில் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க என ஒருவர் கோஷம் எழுப்புவார். இந்த காமெடி பெரிய அளவில் ஹிட் அடித்தது. 2001 ஆம் ஆண்டு, இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் வெளிவந்த என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் தேவயானி ஹீரோயினாக நடித்தார்.இதில் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க என கோஷம் எழுப்பிய நடிகரின் நிஜப் பெயர் ஜெயக்குமார்.

ஆனாலும் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் வாய்க்கவில்லை. குடும்பத்திலோ கஷ்டமான சூழல். இதனால் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்னும் நிர்பந்ததால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஜெனரேட்டர் மெக்கானிக் வேலைக்கு மாறினார். அண்மையில் இவர் முன்னாள் பத்திரிகையாளரும், சினிமா உதவி இயக்குனருமான புகாரியின் புகாரி ஜங்சன் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அதில் அவர், ‘வடிவேலு தன்னோடு நடிக்கும் நடிகர்களையும் நன்றாகக் கவனித்துக் கொள்வார்.

நடிகர் பாண்டியராஜனிடம் தான் முதன் முதலில் வாய்ப்புக் கேட்டேன்.பிரபுதேவா ஹீரோவாக நடித்த டபுள்ஸ் படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். நான் முதன் முதலில் அந்த படத்தில் வளையலை கழட்டுங்க…தாலிகழட்டுங்கன்னு டயலாக் பேச்னேன். என் முதல் டயலாக்கே அபசகுணம் தான்.

24 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். தேவயானி அந்த டயலாக் பேசியதும் விளையாட்டாக அடித்தது என் மேல் வேகமாக பட்டுவிட்டது. உடனே அவரே பதறிப்போய்விட்டார். எனக்கு அந்த டயலாக் தான் அடையாளம். அதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் ராஜ்குமாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஜெண்டில்மேன் படம் சூட்டிங் நடந்தபோது இயக்குனர் சங்கரின் கார் வந்தது. அதை நான் சும்மா தொட்டுப் பார்த்தேன். ஒருவர் ஓடிவந்து திட்டினார். நாமும் கார் வாங்கி, செட்டிலாக வேண்டும் என சினிமாவை தேர்ந்தெடுத்தேன்.’என வெள்ளந்தியாகச் சொல்லும் ஜெயகுமார் இப்போது ஜெனரேட்டர் மெக்கானிக்காக வாழ்க்கையை ஓட்டிவருகின்றார்.

You may have missed