நடிகர் விமல் மற்றும் யோகிபாபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் அப்டேட்…! வெளியான தகவல்கள்…!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக காணப்பட்டவர் தான் நடிகர் விமல். இவர் சில வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் சில படங்களில் தோல்வியையையும் கண்டுள்ளார். இவருக்கு சமீபத்தில் வந்த படங்கள் அனைத்தும் தோல்வியை கண்டதால். பெரிதளவில் சினிமாவில் இவருக்கு வரவேற்பு இல்லை. இந்நிலையில் இவருடைய நடிப்பில் மற்றும் ட்ரெண்டிங் காமெடி நடிகரான யோகி பாபு இருவரின் நடிப்பிலும் தற்போது ஒரு புது படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தினை அப்துல் மஜித் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் சாம்பிகா டயானா, எம் எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் கலாட்டா நிறைந்த படமாக தான் இருக்குமாம். மேலும் இந்த படத்தின் கதை நம் அன்றாட வாழ்க்கையில் ப்ரோக்கர்களை வைத்து நாம் காரியம் சாதிப்பது போன்ற கதை களத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் இந்த படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசித்து பார்க்கும் விதமான கதை களத்தினை கொடுத்தான் எடுக்க பாடுள்ளதாம். மேலும் இந்த படத்தின் இறுதி கட்ட பணி நெருங்கி வருகிறதாம். இந்த படத்தின் பெயர் மற்றும் டீசெர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என படக்குழு அறிவித்து உள்ளது.