இது தான் ரியல்.. ஒத்தையடி பாதை ஒரு கை யில் சைக்கிள் ஓட்டி மாஸ் காட்டிய இளைஞ்சர்..!

சைக்கிள், பைக்,கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்வது பலருக்கும் பிடித்தமான ஓன்று. சாலைகள் காலியாக இருக்கும் போது சைக்கிள் மற்றும் பைக்கில் பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். யாரும் முன்னாலும், பின்னாலும் வராத காரணத்தால் நம் விருப்பபடி வாகனங்களில் பயணிக்கலாம்.

சாலைகளில் இளைஞர்கள் இரு சக்கர மோட்டார் வாகனங்களில் சாகசம் செய்யும் காட்சிகளை கண்டால் மனது பதைபதைக்கும். அவர்களுக்கு எதாவது நடக்க கூடாதது நடந்து விடுமோ என்ற எண்ணம் மட்டும் தான் இருக்குமே தவிர அந்த கானொலிகளை யாரும் மகிழ்ச்சியாக பார்க்கமாட்டார்கள். சிறு வயதில் அனைவருக்கும் சைக்கிளில் பயணம் செய்த நினைவுகள் பசுமரத்தாணி போல் நெஞ்சை விட்டு அகலாமல் இருக்கும். எல்லோரும் சாலைகளில், படிக்கட்டுகளில், பாலங்களில் சைக்கிள் ஒட்டி பார்த்திருப்போம்.

இங்கு ஒருவர் ஒரு அடிக்கும் குறைவான அகலம் கொண்ட பாலத்தில் ஒரு கையில் குடையை பிடித்தபடி அசால்ட்டா சைக்கிளில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு பயணம் செய்கிறார். இந்த நபர் கண்டிப்பாக பல நாட்கள் பயிற்சி செய்து இந்த சாகசத்தை எட்டியிருக்கிறார் என்பது புலப்படுகிறது. இவரின் திறமையை பாராட்டி இணையவாசிகள் அந்த இளைஞரை பாராட்டி வருகின்றனர்.